image 1cbbc2fc11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மடிக்கணினி வெடிப்பு! – மாணவன் உயிரிழப்பு

Share

பலபிட்டிய – பட்டபொல, கொபேய்துடுவ பிரதேசத்தில் மடிக்கணினி சார்ஜர் வெடித்ததில் 14 வயதான மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன், மடிக்கணினியை தனது மடியில் வைத்து பயன்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, மடிக்கணினியின் சார்ஜர் வெடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த சிறுவன், பொல்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...